சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். த.வெ.க தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொது நலப் பணிகள் மற்றும் கொண்டாட்டங்களை மேற்கொண்டு, இந்த நாளை சிறப்பித்தனர். விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய அரசியல் தலைவர்கள் பற்றி பார்ப்போம். பாஜக தமிழக […]
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் மதிமுக போட்டியிட விரும்புவதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் எட்டு ஆண்டுகளாக உறுதியாக இருந்து வரும் மதிமுக, கட்சியின் அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்த, 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆசைப்படுவதாக அவர் கூறினார். இந்தப் பேட்டி, திருச்சி […]
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 21 முதல் 22 -ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல, ஜூன் 23-ஆம் தேதி முதல் ஜூன் 27 வரை தமிழகத்தில் ஒரிரு […]
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆளுநர் விருட்சசனம், புஜங்காசனம் மற்றும் தனுரசசனம் உள்ளிட்ட யோகா ஆசனங்களைச் செய்தார். அந்த வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம், காக்கா தோப்பு பகுதியில் உள்ள அதி நர்சிங் கல்லூரியில் நடந்த சிறப்பு யோகா பயிற்சியில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா பங்கேற்றார். மேலும், அவருடன் […]
சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 19ம் தேதி புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் ‘மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள், அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று […]
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்குப் பிறகு, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபை அறிவித்தது. அன்றாட வாழ்வில் யோகாவை சேர்ப்பதால் மனம் மற்றும் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை இந்தியா […]
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது.ஒரு பக்கம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை குறித்து விமர்சனம் செய்து பேசி வருவது போலவும் மற்றோரு பக்கம் திமுகவை சேர்ந்தவர்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், திமுக ஆட்சியில் மக்கள் துயரமாக இருக்கிறார்கள் என்பது போல சமீபத்தில் விமர்சித்து பேசியிருந்தார். அவருடைய பேச்சு குறித்து இன்று […]
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு) தமிழக பாஜக மற்றும் இந்து முன்னணி இணைந்து ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு, மதுரை அம்மா திடலில் நடைபெறவுள்ளதாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பங்கேற்பார்கள் எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். மாநாட்டில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திரபிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் […]
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த 6 மாதங்களுக்கான டோக்கன்கள் இன்று (ஜூன் 21) முதல் வரும் ஜூலை 31ம் தேதி வரை, காலை 8 மணி முதல் இரவு 7:30 மணி வரை வழங்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருபவர்கள் குடும்ப அட்டை, வயது சான்று மற்றும் 2 புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும் என […]
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள் மணிமாடம்’, 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகன நிறுத்தம், உணவு, காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றுள்ளன. முத்தமிழறிஞர் கலைஞரால் 1974, 1975 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது சென்னை மாநகரின் கலைச்செல்வம் வள்ளுவர் கோட்டம். இந்த வள்ளுவர் கோட்டம் சுற்றுலா மையமாக எழுச்சிபெற்று உலகத் தமிழ் அறிஞர்களாலும், […]
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து […]
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில் பல தொழிலாளர்கள் உயிரிழப்பதும், காயமடைவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமை, தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி இல்லாமை, மற்றும் ஆலை நிர்வாகங்களின் அலட்சியம் ஆகியவை கருதப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எட்டக்காபட்டியில் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 […]
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய திமுக அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ தயாநிதி மாறன் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம், நேற்றைய தினம் மணி கண்ட்ரோல்.காம் என்கிற வணிக செய்தி ஊடகம் பக்கத்தில், ‘திமுக எம்.பியும், கலாநிதி மாறனின் சகோதரருமான தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி உள்ளிட்ட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் […]
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி நடந்ததாகவும், இதில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை, டாஸ்மாக் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனின் சென்னை அல்வார்பேட்டையில் […]
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்து நடவடிக்கை பயணிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த 4 விமானங்களும், சென்னைக்கு வரவிருந்த 4 விமானங்களும் உட்பட மொத்தம் 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் டெல்லி, மும்பை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படவிருந்தவை. குறிப்பாக, ஏர் இந்தியாவின் ஒரு […]
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் ‘உலக அகதிகள் தினம்’ என அனுசரிக்கப்படுகிறது. போர், மோதல் அல்லது துன்புறுத்தல் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நபர்களுக்காக, இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உலக அகதிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வறுமையை ஒழிப்பதில் ஐரோப்பிய நாடுகளை முந்திய தமிழ்நாடு என்றும், நிதி ஆயோக் அறிக்கையை சுட்டிக் காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், […]
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சன் டிவி பங்கு தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கலாநிதிக்கு தயாநிதி நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், இப்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் உரிமையாளர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆம், சகோதரர் […]
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அதிமுக தனது கட்சி அமைப்பை வலுப்படுத்தவும், தொண்டர்களை திரட்டவும் தொடர்ந்து மாவட்ட அளவிலான கூட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கழக வளர்ச்சி பணிகள் குறித்து […]
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற 10 வயது சிறுமி நேற்றைய தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், காவல்துறையின் மீது விமர்சனங்களையும் எழுப்பியது. மேலும் இந்த விபத்து, சென்னையில் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் விபத்தின் மூலம் உயிரிழப்பை […]
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியதாகக் கூறப்படும் நித்யானந்தா, “கைலாசா” என்ற பெயரில் ஒரு தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். இந்த “கைலாசா” நாடு எங்கு உள்ளது, அதன் சட்டபூர்வ நிலை என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் இதுவரை இல்லை, […]