சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி பதவிக்கான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ், தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் “100% பொய்யானவை” என்று கூறியுள்ளார். தற்பொழுது, சேலத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, சேலம் எனக்கு பிடித்த மாவட்டம், நான் படித்த மாவட்டம். பா.ம.க. தனித்துப் போட்டியிட்ட போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த மாவட்டம். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு […]
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், ஆகியோர் நேற்றைய தினம் உடல்நலக் குறைவு எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (ஜூன் 19) சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, “பாமக சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருவரும் பூரணமாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் குணமடைய வேண்டும் என […]
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள் மற்றும் குழப்பங்களுக்கு திமுக காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ராமதாஸ், சென்னையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அன்புமணி கூறிய குற்றச்சாட்டு ஒன்றை மறுத்து, அதனை “அப்பட்டமான பொய்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை […]
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று ராமதாஸ், தான் மீண்டும் கட்சியின் தலைவர் என்றும், அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் மே 11 அன்று நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில் ராமதாஸ், அன்புமணியை மறைமுகமாக விமர்சித்தார். பிறகு, ஜூன் 13 அன்று ராமதாஸ், “என் மூச்சுக்காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்,” […]
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவி சௌமியா உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. சௌமியாவை அவரது தாயார் யாமினி இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, பள்ளி அருகே பொதுப்பாதையில் வந்த கனரக லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் சௌமியா தூக்கி வீசப்பட்டு சம்பவ […]
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது மவுண்ட்-பூனமல்லி சாலையில் உள்ள L&T தலைமை அலுவலகம் அருகே, இரண்டு I-கிர்டர்கள் (ஒவ்வொன்றும் 75 டன் எடை கொண்டவை) திடீரென இடிந்து விழுந்தன.இந்த விபத்தில், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சி. ரமேஷ் (43), பில்லிங் மெஷின் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக பணிபுரிந்தவர், தனது இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, கான்கிரீட் கிர்டர்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு மனைவி […]
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் மற்றும் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தூண்டிய வழக்கில், தமிழகத்தில் சென்னை, கோவை, மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நான்கு பேரை கைது செய்தது. இந்த வழக்கு, 2022 அக்டோபர் 23 அன்று கோவையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக உள்ளது. இதுவரை இந்த வழக்கில் மொத்தம் […]
சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து,நேற்று (18-06-2025) காலை 05.30 மணி அளவில் மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஜார்க்கண்ட் வழியாக நகரக்கூடும். அதே சமயம், தமிழகத்தில் இன்று 4 […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (AITUC) அறிவித்துள்ளது. தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் பங்கேற்கின்றனர். டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். வரும் அக்டோபர் 2ம் தேதி காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை துவங்குவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் நீண்ட காலமாக […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, “கீழடி ஆய்வு முடிவுகள் பாஜகவின் புராணக் கதைகள் அல்ல, அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் தொகுக்கப்பட்டவை” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. 2014இல் கீழடியில் அகழாய்வு செய்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், அகழாய்வில் கிடைக்கப் […]
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமான ஆதாரங்களாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக்கில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்குதல், மதுபான போக்குவரத்து டெண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ரூ.1000 கோடி மதிப்பிலான முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த முறைகேடுகளில் சில முக்கிய […]
சென்னை : சென்னை – டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு 7.10க்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானமும், சென்னையில் இருந்து இரவு 8.40மணிக்கு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு நிர்வாக காரணங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாற்று விமானங்களைத் தேர்வு […]
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சபாநாயகரை சந்திக்க தலைமைச் செயலகம் வந்தபோது அருளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அருள் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம், தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நாளை கூட்டும் நிலையில் இருவரும் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த காலக்கெடுவை பின்பற்றத் தவறினால், ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல் பிரிவு அமர்வு, தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர். 2014 ஆகஸ்ட் 1 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி […]
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று (17-06-2025) காலை 05.30 மணி அளவில், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மேலும் வலுவடையக்கூடும். இதன் காரணமாக 18-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், […]
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், “கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் தேவை. நிதானமாக யோசித்து, சரியான முடிவு எடுப்போம்,” என்று அவர் கூறினார். செய்தியாளர்கள் தொடர்ச்சியாக இது தொடர்பான கேள்விகளை கேட்டு வருவதால் பிரேமலதா இன்று சற்று கோபம் அடைந்தார். கோபத்துடன் பேசிய […]
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரது சகோதரி பொன்னரசி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, ராஜாவும் அவரது மனைவி அனுஷாவும், பொன்னரசியை அவர்களது நிறுவனமான ஒம்மீனா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 16% பங்குகளை ஒதுக்குவதாக உறுதியளித்து முதலீடு செய்ய வைத்தனர். ஆனால், […]
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இந்தக் கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் […]
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ”ஆளுநர் விருதுகள்” 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் ஆளுநர் விருதுகள்-2025′ க்கு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 14 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2 பிரிவுகளிலும் தலா 4 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்படும். சமூக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய 2 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தொண்டு நிறுவனத்துக்கு ரூ.5 […]
திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை நடந்த நிலையில், மீண்டும் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தற்பொழுது, திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஏடிஜிபி ஜெயராம் மற்றும் ஜெகன் மூர்த்தி இருவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணை செய்யப்படுகிறது. அதன்படி, ஜெகன் மூர்த்தியிடம் டிஎஸ்பி தமிழரசி, ஜெயராமிடம் டிஎஸ்பி புகழேந்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவாலங்காடு காவல் நிலையத்தின் தனித்தனி அறைகளில் இருவரிடமும் […]