கொரோனா வைரசுக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. மத்திய அரசு அண்மையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து முதற்கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாக்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி பாதுகாப்பற்றது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பரிசோதனையில் கலந்துகொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க […]
ஆளுநரை சந்தித்து மனு அளிக்க முயல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு, இன்று மாலை சென்னை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து, அதிமுக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்ததற்காக 2-ம் கட்ட புகார் பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது. கடந்த 22-ம் தேதி திமுக 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் […]
டீசல் விலை லிட்டர் ரூ.85 ஆக அதிகரித்துவிட்டதால் லாரி வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை அடுத்து பார்சல் லாரி வாடகை கட்டணம் இன்று முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளது என உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.63 ஆக இருந்தபோது வசூலித்த லாரி வாடகையே தற்போது வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது லிட்டர் விலை ரூ.85 ஆக உயர்ந்துவிட்டதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை […]
தமிழகத்தில் ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் குளிர்சாதன வசதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏசி வசதியுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைககளுக்கு ஏசி வசதியுடன் பேருந்துகள் இயங்கலாம் என தெரிவித்துள்ளனர். ஏசி பேருந்துகளில் 65 வயதான நபர்களை அனுமதிக்க […]
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மது போதையினால் குற்றங்கள் பெருகுவதும், குடும்பங்கள் சீரழிவதும் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. குடும்ப வன்முறை தொடங்கி காவல் அதிகாரிகளைத் தாக்குவது வரை சென்றுவிட்டது. மதுக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்கிற வாக்குறுதிகள், கொடுத்தவருடனேயே மறைந்துவிட்டன. மதுவினால் ஏற்படும் தீமைகளைக் களைய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறது. கொரானா சமயத்தில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது […]
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள உதவிகளை பட்டியலிட்டு பேசினார். அப்போது, குடியுரிமை சட்டம் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பொதுமக்கள் மீதான தொடரப்பட்ட வழக்குகளும் […]
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு […]
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகையை சுற்றி போடப்பட்டிருந்த 5 அடுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கடந்த மாதம் போராட்டம் நடத்தப்பட்டது. அதேநேரம், பாஜக சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டதால், ஆளுநர் மாளிகை மற்றும் முக்கிய இடங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து, தற்போது புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்து வந்த […]
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.25-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை காங்கிரஸ் கட்சினர் பெறலாம். பொதுத்தொகுதிக்கு ரூ.5,000, தனித்தொகுதி, மகளிர் தொகுதிக்கு ரூ.2,500 நன்கொடையாக தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்ப […]
மோடிக்கு காவடி தூக்கும் எடப்பாடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் பாடுபடுங்கள். மதுரை வண்டியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என […]
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தான் மோடி அரசு மக்களுக்கு தரும் பரிசு என்றும் விமர்சித்துள்ளார். மதுரை வண்டியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார […]
தமிழிசை சௌந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம். தற்போது பாஜக அரசால், கவர்னராக நியமன செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநரான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், நேற்று புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றார். நாகப்பட்டினத்தில் ஓ.எஸ்.மணியன் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழிசை சௌந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம். தற்போது பாஜக அரசால், கவர்னராக நியமன […]
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5:30 மணியளவில் ஆளுநரை சந்திக்க உள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5:30 மணியளவில் ஆளுநரை சந்திக்க உள்ளார். அமைச்சர்கள் ஊழல் செய்ததற்காக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 2-ம் கட்ட பட்டியலை திமுக அளிக்கவுள்ளது. இந்த பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு புகார் பட்டியலை அளிக்கவுள்ளது. கடந்த 22-ம் தேதி திமுக 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருந்தது […]
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியின் அமைப்பாளராக இருந்த செல்லத்துரை என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள, அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர். செல்லத்துரை. இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியின் அமைப்பாளராக இருந்துள்ளார். இவர் நேற்று தனது வீட்டிலிருந்து தனது கோழிப்பண்ணைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். […]
வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மக்களால் தண்டிக்கப்படுவார்கள். சிபிஐ கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா அவர்கள் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளான் சட்டங்களை ரத்து செய்யாமல், பாஜக வெறும் பேச்சுவார்த்தை வருகிறது. வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மக்களால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழு […]
மார்ச் 1-ஆம் தேதி தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்திற்கு மீண்டும் வரும் பிரதமர் மோடி, நிறைவடைந்த பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திட்டங்களை தொடங்கி வைத்த பின் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14-ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை மெட்ரோ சேவை உட்பட ரூ.8,000 கோடிக்கு மேல் மதிப்பிலான பலத் […]
இளைஞர்களாகிய நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எதிரிகளை தேர்தல் களத்தில் ஓட ஓட விரட்டி வெற்றி நீங்கள் பாடுபட வேண்டும். அம்பாசமுத்திரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டமானது சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை இரண்டும் […]
ரூ.20 கோடி மதிப்பில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தென்காசி பாவூர் சத்திரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி. விவசாயிகளின் நலனுக்காக ரூ.20 கோடி மதிப்பில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். விவசாயிகள் பயிரிடம் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பிரமாண்ட சந்தை அமைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும்ம் நெல்லை மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு சந்தையை கட்ட அரசு பரிசீலிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தை விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது தேசிய பசுமை தீர்ப்பாயம். தமிழக அரசு, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்ட […]
அத்தனை அராஜகங்களையும் முறியடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் நெல்லை மாவட்டத்தில் ஈடுபட்ட போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேர்மையான முறையில் தான் ஆட்சி அமைக்க முடியும். ஒருவரை வீழ்த்தி வர வேண்டும் என நினைத்தால் முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அத்தனை அராஜகங்களையும் முறியடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் ஆட்சி செய்தாலும், எம்ஜிஆர், […]