தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,18,594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 71,116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4545 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 71,116 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 3,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,545 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 71,116 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,203பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71,230 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 47,735 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 22,374 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் […]
திருச்சியில் சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் மகள், கங்காதேவி. 14 வயதாகும் அந்த சிறுமி, நேற்று ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு 11 […]
மதுரை அருகே பசுமாடு சத்தம் போட்டதால் மாட்டின் உரிமையாளர் பயங்கரமாக மாட்டை தாக்கியுள்ளார். மதுரை மாவட்டம் ஜெயந்திநகரை சேர்ந்தவர் முத்துக்கணி இவர் தனது வீட்டில் 10 பசுமாடுகள் வளர்த்து வருகிறார், மேலும் நேற்று தனது வீட்டிற்கு வெளியே ஒரு பசுமாடு மட்டும் நீண்ட நேரமாக கத்திக்கொண்டுள்ளது, இதனால் கோபமடைந்த பசுமாடு உரிமையாளர் முத்துக்கணி வேகமாக சென்று கீழே இருந்த கட்டையை எடுத்து பசுமாட்டை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதனால் அந்த பசுமாடு வலியால் தவித்து வலி தாங்கமுடியாமல் மயங்கி […]
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசின் நிதிநிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய அதேவேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும்.மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் […]
அரசு எடுத்த நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் கொரோனா சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அவர் பேசுகையில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரூ. 136 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற அதிநவீன வசதிகள் உள்ளது. அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் மன அழுத்தம் போக்க பிரத்யேக யோகா […]
ஞானம் உள்ள ஆ. ராசா இந்த பாரத் நெட் விவகாரத்தில் ஏன் இப்படி பேசுகிறார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னை கொளத்தூர் சீனிவாசா நகர் பகுதியில் கொரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுவரும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முககவசம் மற்றும் மருந்து, மாத்திரைகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், முழு ஊரடங்கில் மக்கள் கொடுத்த ஒத்துழைப்பை போலவே தளர்வுகளுடன் கூடிய முடக்கத்திலும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா சிகிக்சைக்காக சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் 127 கோடி மதிப்பிலான 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் உருவாக்கப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை முழுக்க முழுக்க நவீன கருவிக்கள் […]
சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்காததால் மாமனாரை கட்டையால் அடித்து கொன்ற மருமகள். அரியலூர் மாவட்டத்தில் செந்துறையிலுள்ள காவேரி பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி , இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு 2010ம் ஆண்டு இவருடைய மூத்த மகன் இராமலிங்கம் உயிரிழந்தார். இவருடைய மனைவி இரானி, மேலும் தனது மகன் இறந்ததை தொடர்ந்து தங்கசாமிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பாகத்தை இராமலிங்கத்தின் மனைவி ராணிக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் […]
சென்னையின் மயிலாப்பூரின் பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பஜ்ஜி பிரியர்களின் மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் மயிலாப்பூரில் மாவட்டம் பொன்னம்பல வாத்தியார் தெருவில் தனது வீட்டு ஜன்னல் வழியாக நடத்தி வந்த பஜ்ஜி வியாபாரம் மிகவும் பிரபலமானதாகும். இவர் தனது வீட்டின் ஜன்னல் வெளியக பஜ்ஜி வியாபாரம் செய்வதால் “JANNAL BAJJI KADAI” என பெயர் வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். […]
வெளிநாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம். கொரோனா காரணமாக விமான போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.மேலும் அந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதே கோரிக்கையுடன் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு […]
கோவை மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம். இவர் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா குணமாகும் என விளம்பரம் செய்து வருகிறார். இந்த மூலிகை மைசூர்பா-வை 19 மூலிகைகள் பயன்படுத்தி தயாரித்து வருவதாகவும், இதை சாப்பிடுபவர்களுக்கு கொரோனா ஒரே நாளில் குணமாகும் எனவும் கடந்த 3 மாதமாக விற்பனை செய்து வருவதாக கூறினார். மேலும் சின்னியம்பாளையம், ஆர் ஜி புதூர், வெள்ளலூர் […]
இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்றே நிதி வழங்க நடவடிக்கை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்த கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கான ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி […]
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்வது தொடர்பாக பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது.இதனிடையே தூத்துக்குடியை சேர்ந்த அதிசய குமார் என்பர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.அதில் , பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் […]
விருதுநகர் மாவட்டம் ஆம்பத்தூர் அருகே சோனி பட்டாசு ஆலை உள்ளது. இது நாக்பூர் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டாசு ஆலையில் மணி மருந்து கலவை உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது இதில் ஒரு அறை முற்றிலும் சேதமடைந்தது, லிங்கா புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராம குருநாதன் இந்த விபத்தில் சிக்கி 70 சதவீத தீக்காயம் அடைந்தார். இந்த நிலையில் இதையடுத்து குருநாதனை […]
விளாத்திகுளத்தில் ஒரே நாளில் 24 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து கடைகளையும் மூட வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் இன்றுவரை குறையாத நிலையில் தூத்துக்குடியிலும் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் இருந்த வியாபாரிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 4ஆம் தேதி விளாத்திகுளத்தில் உள்ள 104 வியாபாரிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் […]
சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை. சென்னை வியாசர்பாடி சின்னத்தம்பி தெருவில் வசித்து வருபவர் முருகன் இவருடைய மகன் பிரசாத் இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்தார், மேலும் இவர் மீது காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது சரித்திரப் பதிவு ஒரு குற்றவாளி எனவும் இவரைக் கூறலாம் , இந்த நிலையில் பிரசாத்தின் தாயார் விநாயகி மீன் வியாபாரம் செய்து வருகிறார், மேலும் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுந்தரராஜன். இவர் தேமுதிக சார்பில் 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுந்தரராஜன் இன்று காலமானார். தற்போது இதற்கு தமிழக முதல்வர் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், திரு.R.சுந்தர்ராஜன் காலமான செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். […]
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.,மேலும், தேனி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து தான் வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தேனி மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதித்தோர் எண்ணிக்கை 1,128 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் […]