அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு நேற்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கட்சி பணிகள் குறித்த ஆலோசனை நடைபெறுவது வழக்கம்.கட்சி மற்றும் மாவட்ட செயலாளர்கள் குறித்து வரும் புகார்கள் குறித்து விசாரிக்க அதிமுக சார்பில் ஐவர் குழு ஓன்று அமைக்கப்பட்டது.இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கமணி , வேலுமணி ,கே.பி.முனுசாமி , நத்தம் விஸ்வநாதன் ,வைத்திலிங்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. இந்த […]
திருச்சியில் 14 வயது சிறுமி ஏரித்து கொலை செய்த வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது என திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் தெரிவித்தார். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் 14 வயது மகள், நேற்று ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மண்டல ஐஜி ஜெயராம் கூறுகையில், சிறுமி எரிந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட […]
கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு . தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,14,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே விமானம் மூலம் நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு .இந்த குழு முதலமைச்சர் பழனிசாமி , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சுகாதாரத்துறை செயலருடன் ஆலோசனை நடத்த உள்ளது. மத்திய […]
ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 8,981 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில்1,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்தது மேலும் இதுவரை சென்னையில் 44,882 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 24,052 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், 1082 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் […]
அரியலூரில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக 3,575 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் பங்களிப்பாக 60 சதவீத நிதியும், மாநில அரசின் பங்களிப்பாக 40 சதவீத நிதியும் வழங்குகிறது.இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் புதியதாக கட்ட உள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி. […]
என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி 2-ம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள், 9 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 2 […]
தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாகத்தான் உள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரானா பாதிப்பை பொருத்தவரை இறப்பு சதவீதம் மிக குறைவாக உள்ளது.கோவை மாவட்டத்தில் போர்க்கால நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர்கள் , செவிலியர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் 24 […]
நாமக்கல்லில் முட்டை விலை 3.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான் என்று கூறலாம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. மேலும் அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது,இந்த நிலையில் முட்டை விலை நேற்று விலையில் […]
சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து, அவிநாசி போலீசாருக்கு, மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கைது நடவடிக்கைக்கு ஆளாகி உள்ள சம்பவம் ஆனது மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில் சம்பவத்தையடுத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி பின்பற்றி நடத்தப்பட்ட கூட்டத்தில், டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் மற்றும் போலீசார் பங்கேற்ற கூட்டத்தில் திருப்பூர் கூடுதல்எஸ்.பி., ஜெயச்சந்திரன், அவிநாசி போலீசாருக்கு […]
தமிழகம் மற்றும் கேரளாவில் 16 உரநிறுவனங்கள் மற்றும் 2 தேயிலை தொழிற்சாலைகள் என்று மொத்தம் 18 நிறுவனங்களின் உரிமத்தை இந்திய தேயிலை வாரியம் ரத்து அதிரடி உத்தரப்பிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இந்திய தேயிலை வாரியம் சார்பாக தென் மாநிலங்களில் உள்ள தேயிலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த தர உறுதிப்படுத்தும் வகையில் பல கட்டுப்பாடு ஆணைகளின் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கையினை அதிரடியாக எடுத்து வருகிறது. இந்நடவடிக்கையின் பெயரில் தமிழகத்தில் கோவை, அன்னூர், மேட்டுப்பாளையம், கேரளாவில், […]
தமிழ்நாடு இந்துசமய அறநிலைய துறை சார்பில் ‘திருக்கோவில்’ என்ற பெயரில் ‘டிவி’ துவக்க உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் என்ற தொலைக்காட்சி துவக்க உள்ளதால் கோவில் நிகழ்ச்சிகளை ‘வீடியோ’ எடுத்து அனுப்ப கோவில் செயல் அலுவலர்களுக்கு அத்துறையின் கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து கோயில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: அறநிலைய துறை சார்பில் சமய கொள்கைகளை மக்களிடம் […]
அதிமுக அரசுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமல்ல. விளைநிலங்களை பறிப்பதே முக்கியமாக உள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஊரடங்கு காலத்தில் எண்ணெய் பதிப்பதற்காக விளைநிலங்களை கைப்பற்ற நடைபெறும் கருத்து கேட்பு கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் வர பேசுகையில், அதிமுக அரசுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமல்ல. விளைநிலங்களை பறிப்பதே முக்கியமாக உள்ளது என அதிமுக அரசை விமர்சித்துள்ளார்.
முதியவர்களை பட்டாம்பூச்சி போல பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேகொண்டு வருகிறது. இருப்பினும், கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், ‘கொரோனாவை தடுக்க ஓராண்டுக்கு மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். அது தான் நிரந்தரமான தீர்வு என்றும், தென்மாவட்டங்களில் தேவைக்கேற்ப கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சுனாமி, வெள்ளம், கனமழையை […]
திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக 3,575 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் பங்களிப்பாக 60 சதவீத நிதியும், மாநில அரசின் பங்களிப்பாக 40 சதவீத நிதியும் வழங்குகிறது. இதுவரை 9 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் புதியதாக கட்ட உள்ள மருத்துவ […]
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி […]
பாவேந்தர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி ( 92) கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்த நிலையில், இன்று புதுச்சேரியில் காலமானார். மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். புதுச்சேரியில் தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித்தந்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது என பல […]
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் வசித்து வருபவர், பெரியசாமி. இவரின் 14 வயது மகள், இன்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்டநேரமாகியும் அவள் வீட்டிற்கு வரத்தால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவளை தேடி வந்தனர். அப்பொழுது ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்ளுக்காட்டில் அந்த சிறுமி எறிந்த நிலையில் மீட்கப்பட்டார். இதனை அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு அம்மாவட்ட காவல்துறை […]
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆகிய ஆயுதப்படை காவலர் உயிரிழந்துள்ளார். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு வருவது கவலை அளித்து வரும் சூழ்நிலையில் கொரோனா தொற்றால் சென்னை ஆயுதப்படை காவலர் நாகராஜன் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 33 வயதே நிரம்பியுள்ள காவலர் நாகராஜன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .கொரோனா பாதிக்கப்பட்டு காவலர் ஒருவரின் பலி கடும் அதிர்வலைகளை அத்துறை சார்ந்தவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 15 பேரும், அரசு மருத்துவமனையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இரத்த சோகை உடன் மதுரைச் சேர்ந்த 14 வயது சிறுமி 30.06.2020 அன்று இரவு 10.35 மணிக்கு அரசு ராஜாஜியில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையில் கொரோனா சோதனை மாதிரி 28.06.2020 அன்று எடுக்கப்பட்டது. முடிவு 28.06.2020 அன்று வந்ததின் விளைவு உறுதியானது. பின் சிகிச்சை பெற்று […]
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சாலையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது வெறிச்சோடிய அந்த சாலையில் ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து வந்தது இந்நிலையில் அந்த பாம்பை பிடிக்க காவல்துறையினர் முயற்சித்தனர். அப்போது அந்த பாம்பு படமெடுக்க தொடங்கியது இதனால் அச்சமடைந்த காவலர்கள் உயிரின ஆர்வலர் ஒருவருக்கு தொடர்பு கொண்டனர் அப்போது அங்கு வந்த அந்த உயிரின ஆர்வலர் அந்த நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டார்.