இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த சம்பவம் லோடிங்..!!

Filming for the film, which will star actor Surya and directed by Mari Selvaraj, is reported to start in February next year.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று தகவல்.

இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற அருமையான படத்தை இயக்கி அறிமுகமானவர்.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற தரமான படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரம் படத்தை இயக்கவிட்டு அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று தற்போது தகவல்கள் பரவி வருகிறது. விரவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.