எல்விஸ் பிரெஸ்லி :அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் காலணி, ரூ.1.25 கோடிக்கு (152,000 அமெரிக்க டாலர்) ஏலம் போயுள்ளது.
எல்விஸ் பிரெஸ்லி அணிந்திருந்த ஒரு ஜோடி நீல நிற மெல்லிய தோல் காலணிகள் ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் மற்றும் சன் ஏல நிறுவனத்தால் ஏலத்தில் விடப்பட்டது. அதனை, அவரின் தீவிர ரசிகர் ஒருவர் இதனை வாங்கியுள்ளார்.
எந்தவித பயன்பாடு இல்லாத அந்த காலத்து காலணி சுமார் ரூ.1.25 கோடிக்கு ஏலம் போனது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், இது ஒரு பிரபலத்தின் காலணி என்பதால், அந்த விலைக்கு அவரது ரசிகரை பெற்று கொண்டது பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது.
unknown node1950களில் எல்விஸ் பிரெஸ்லி மேடை ஏறிப் பாடும்போது ஊதா நிறத்திலான காலணிகளை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளார். ஐ வாண்ட் யூ, ஐ நீட் யூ, ஐ லவ் யூ என பல நிகழ்ச்சிகளின் போது, பிரெஸ்லி அணிந்திருந்த இந்த ஷூக்களை, தனது அமெரிக்க ராணுவத்தில் சேருவதற்கு முன்பு, 1958 இல் அவர் தனது நண்பர் ஆலன் ஃபோர்டாஸுக்கு இந்த காலணிகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
