தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகையான மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை கடந்த 2009 -ஆம் ஆண்டு ஜூலை -12 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
unknown nodeஇந்த நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு சிகிச்சைக்குப்பின் மீண்ட நிலையில் கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார்.
unknown nodeஇதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வித்யாசாகர். சிகிச்சை பலனின்றி ஜூன் 28-ஆம் தேதி மாலை உயிரிழந்தார். மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
unknown nodeவித்தியாசாகரின் உடல் இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க நடிகை மீனா வீட்டிற்கு நடிகை ரம்பா, நடன இயக்குநர் கலா மாஸ்டர், குணசித்திர நடிகை லட்சுமி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.