தளபதி 65 குறித்து நடிகை பூஜா ஹெக்டே ட்வீட்.!!

Actress Pooja Hegde has confirmed on her Twitter page that the pooja for thalapathy 65 has started

தளபதி 65 படத்திற்கான பூஜை தொடங்கப்பட்டுள்ளது என்பதை நடிகை பூஜா ஹெக்டே ட்வீட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார்.

விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பூஜை சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே தனது ட்வீட்டர் பக்கத்தில் தளபதி 65 படத்திற்கான பூஜை நடைபெறுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

unknown node

இது குறித்து அவர் கூறியிருப்பது ” இன்று தளபதி 65 படத்திற்கான பூஜையில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை நான் வேறொரு படத்தின் படப்பிடிப்பும் இருக்கிறேன். எனது நினைவு எல்லாம் அங்கே தான் இருக்கிறது. விரைவில் நான் படப்பிடிப்பு இணைவேன் என்று ட்வீட் செய்துள்ளார்.