தல அஜித் சினிமாவில் மட்டும் தன் கவனத்தை செலுத்தாமல் தனக்கு பிடித்த கார், பைக் ரேஸிங், போட்டோகிராபி, ஆளில்லா விமானங்களை இயக்குவது என பல விஷயங்களை கற்று கொண்டு அதை பயன்படுத்தியும் வருகிறார்.
unknown nodeஆளில்லா விமானங்களை இயக்க கற்றுகொண்டதால், மெட்ராஸ் இன்ஸிடியுட் மாணவர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டார். இவர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட தக்ஷா குழு இந்திய அளவில் நடைபெற்ற ஆளில்லா சிறியரக விமான காட்சியில் பரிசு வென்றது.
அடுத்ததாக இந்தகுழு ஆஸ்திதிரேலிய குயின்ஸ்லேன்டில் நடைபெறவுள்ள ஆளில்லா விமான கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இதில் இவர்கள் தயாரித்த விமானம் சுமார் 10 கிலோ வரை எடை தாங்கும் என்பதால் இதனை ஏர் ஆம்புலன்ஸாக பயன்படுத்தலாம் என தல அஜித் அலோசனை கூறியுள்ளார்.
DINASUVADU