தல அஜித்துடன் மோதும் அல்லு அர்ஜுன்..?? வலிமை VS புஷ்பா..!!

It has been reported that the movie Valimai starring Ajith will be released on August 12

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்

அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார் . மேலும் அஜித்திற்கு வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.

மேலும் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த மாதம் 15 ஆம் தேதி தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதைபோல் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா திரைப்படமும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இரண்டு படங்களும் மோதவுள்ளதாள் எந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.