பாஜக தொண்டர்களை சமாளிக்க பிரதமரிடம் ஐடியா கேட்ட 'இமைக்க நொடிகள்' பட வில்லன்!

பாஜக மீண்டும் மக்களைவிட தேர்தலில் பிரமாண்ட வெற்றியை அடைந்துள்ளது. இதற்கு பலரும் மோடி மற்றும் பாஜகவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்

பாஜக மீண்டும் மக்களைவிட தேர்தலில் பிரமாண்ட வெற்றியை அடைந்துள்ளது. இதற்கு பலரும் மோடி மற்றும் பாஜகவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் பிரபலமான இயக்குனரும் தமிழில் இமைக்க நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கு வாழ்த்தும், ஒரு கோரிக்கையும் முன் வைத்துள்ளார். ]

அவர் பதிவிட்ட டிவிட்டரில், ‘ பிரதமராக தேர்வான மோடி ஜிக்கு வாழ்த்துக்கள். அதே நேரம், பாஜக எதிர்பாளரான எனது மகளை சில பாஜக தொண்டர்கள் மிரட்டும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு மிரட்டி வருவதாகவும், அவர்களை எப்படி சமாளிப்பது என சொல்லித்தருமாறும் கூறியுள்ளார்.

DINASUVADU