#BREAKING: அனைவரும் எதிர்பார்த்த வலிமை அப்டேட்..! உச்சகட்ட உற்சாகத்தில் தல ரசிகர்கள்.!

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான டைட்டில் அறிவிக்கப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. 2 வருடங்கள் அதாவது 700 நாட்களுக்கும் மேலாக ஒரு அப்டேட் கூட வராமல் இருந்ததால் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள், கிரிக்கட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரிடம் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில், தற்போது அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், தற்போது வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். இதனையடுத்து ட்வீட்டரில், #ValimaiMotionPoster என்ற ஹஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றார்கள்.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் கார்த்திகேயா, அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

unknown node
#BREAKING: அனைவரும் எதிர்பார்த்த வலிமை அப்டேட்..! உச்சகட்ட உற்சாகத்தில் தல ரசிகர்கள்.!