ஒரு லெவலுக்கு போனதும் மாறிட்டாங்க! தர்ஷா குப்தாவின் நிஜ முகத்தை உடைத்த நடிகை யாழினி!

இனிமேல் யாருக்காகவும் வாழாமல், வந்த நோக்கத்திற்காகத் தன் கரியரில் ஜெயிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் யாழினி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை :சின்னத்திரை வட்டாரத்தில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. ஏனென்றால், சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் தாண்டி நடிகைகளின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களும், அவர்களுக்குள் இருக்கும் மோதல்களும் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில், பிரபல சின்னத்திரை நடிகை யாழினி, தனது முன்னாள் தோழியும் பிக்பாஸ் பிரபலமுமான தர்ஷா குப்தா (Dharsha Gupta) மற்றும் தனது நண்பர்கள் வட்டம் குறித்துப் பேசியிருக்கும் அதிரடிப் பேட்டி இப்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது."ஒரு லெவலுக்குப் போனதும் தர்ஷா குப்தா மாறிட்டா..." என்று யாழினி வெளிப்படையாகத் தனது ஆதங்கத்தை உடைத்துள்ளார்.

தர்ஷா குப்தாவுடன் தனக்கிருந்த நட்பு குறித்து நடிகை யாழினி பேசியதாவது "தர்ஷா குப்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ள போனாங்க இல்லையா? அவ எனக்கு நல்ல பிரண்டாத்தான் இருந்தா. லாக்டவுன் சமயத்துல அப்புறம்கூட என்கிட்ட நல்லாதான் பேசிட்டு இருந்தா. 'மச்சான், நான் இந்த மாதிரி போட்டோஷூட் எல்லாம் பண்ணிட்டு இருக்கேன், வெயிட் ரெடியூஸ் பண்ணிட்டு இருக்கேன். நீயும் ஒரு மெய்ட் (வேலை ஆள்) வச்சு இந்த மெனு எல்லாம் ஃபாலோ பண்ணு'ன்னு எனக்கு வாட்ஸ்அப்-ல மெசேஜ் எல்லாம் பண்ணுவா.

ஆனா, இப்போ அவ நம்பர் என்கிட்ட இருக்கு, கால் பண்ணா ரெஸ்பான்ஸ் பண்றது இல்ல. அதனால நான் விட்டுட்டேன். அதுக்கப்புறம் குக் வித் கோமாளி புகழ் கூட 'சப்வே' (Subway) அப்படின்னு ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணும்போது, மச்சான் ஒருத்தன் அவளுக்கு கால் பண்ணிக் கொடுத்தான். நான் பேசும்போது, 'ஆ... எப்படி இருக்கீங்க? வாங்க... போங்க...'ன்னு பேசுறா. எனக்கு செம்ம ஷாக்! சரி ஓகே, அவங்க எல்லாம் ஒரு லெவலுக்குப் போயிட்டாங்க. இனிமே நம்மள மதிக்க மாட்டாங்க, பேச மாட்டாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்."

மேலும், "மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்கணும், ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு கேரக்டர் இருக்கும்" என்று தர்ஷா குப்தாவின் இந்த திடீர் மாற்றத்தைக் குத்திக் காட்டியுள்ளார் யாழினி.

தர்ஷா குப்தா மட்டுமின்றி, தனது ஒட்டுமொத்த நண்பர்கள் வட்டம் தன்னை எப்படி ஒரு 'சுயநலத்தோடு' பயன்படுத்திக் கொண்டது என்பதையும் யாழினி ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார்.

"நான் என் பிரண்ட்ஸை சேர்த்துக் கிட்டது எல்லாமே அன்பு, பாசத்துக்காகத்தான். ஆனா, அவங்களோட நோக்கம் என்னன்னா... யாழினி வந்தா செலவு பண்ணுவா, சமைச்சு கொடுப்பா, ஜாலியா இருப்பாங்கிறது மட்டும்தான். நாங்க மிட்நைட்-ல வெளியில ஃபுட் சாப்பிடப் போறோம்னு வச்சுக்கோங்க, என் பிரண்ட்ஸ்க்கு யாருக்காவது ட்ரிங்க்ஸ் சாப்பிடுற பழக்கம் இருந்தா கூட, நான் ஒரு 'டீ டோட்டலர்' (Tea Totaler - மது பழக்கம் இல்லாதவர்).

அதனாலேயே, 'இவ ட்ரிங்க்ஸ் பண்ண மாட்டா, இவளைக் கூட்டிட்டு போ... இவகிட்டதான் கார் இருக்குல்ல, இவ டிரைவ் பண்ணுவா... போலீஸ் புடிச்சாலும் பிரச்சனை இல்லை' அப்படின்னு என்னை யூஸ் பண்ணிப்பாங்க. அப்பதான் எனக்குத் தோணுச்சு, எல்லாரும் நம்மள அவங்க தேவைக்குத்தான் பயன்படுத்திக்கிறாங்கன்னு" என்றும் மனதில் வேதனை வைத்துக்கொண்டு பேசியிருக்கிறார்.

இந்த ஏமாற்றங்களுக்குப் பிறகு தனது வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொண்டதாகக் கூறும் யாழினி, "இனிமேல் எனக்கு நண்பர்களே வேண்டாம். நமக்காக நாம் ஓடுவோம், நமக்காக நாம் இருப்போம். இங்க யாருமே நிரந்தரம் கிடையாது. வந்த நோக்கத்துக்காக நாம் ஜெயிக்கணும், அதுல மட்டும்தான் என் ஃபோகஸ் இருக்கு" என்று ஆக்ரோஷமாகத் தனது பேட்டியை முடித்துள்ளார். இவருடைய பேட்டியை பார்த்த ரசிகர்கள் தர்ஷா குப்தாவுக்கே வாய்ப்பு இல்லை என கலாய்த்து வருகிறார்கள்.

ஒரு லெவலுக்கு போனதும் மாறிட்டாங்க! தர்ஷா குப்தாவின் நிஜ முகத்தை உடைத்த நடிகை யாழினி!