சென்னை :நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் 33 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அவர் தனது சினிமா பயணத்தை “அற்புதமான பயணம்” என்று குறிப்பிட்டு, எண்களின் மீது நம்பிக்கை இல்லை என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் தனக்கு முக்கியமானது என்று தெரிவித்தார்.
மேலும், “சினிமா துறைக்கு எந்த பின்புலமும், யாருடைய சிபாரிசும் இல்லாமல்தான் நுழைந்தேன். 33 ஆண்டுகளை இப்போது நிறைவு செய்கிறேன். எனது இத்தனை வருட திரைவாழ்வில், விடாமுயற்சி என்பது நான் கற்றுக்கொண்டதல்ல. நான் வாழ்ந்த விஷயம்.
கணக்கிட முடியாத அளவுக்கு சினிமாவில் நான் விழுந்து எழுந்துள்ளேன். இதற்கிடையே நீங்கள் என்மேல் வைத்த நம்பிக்கை, எளிதானதல்ல ரசிகர்களாகிய நீங்கள் இல்லாமல் நான் இல்லை. உங்களின் அன்புதான் என்னை காப்பாற்றியுள்ளது. அதற்கு என் நன்றி. என்றும் அந்த அன்பையோ உங்களையோ நான் சுயநலத்துக்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்” என்று கூறியிருக்கிறார். மேலும் அந்த அறிக்கையில் அஜித் தனது மோட்டார் ரேசிங் ஆர்வத்தையும் பகிர்ந்துள்ளார்.
2025இல் “அஜித்குமார் மோட்டார் ரேசிங்” என்ற பெயரில் மீண்டும் விளையாட்டுத் துறையில் நுழைந்ததாகவும், இது வயது வரம்பு மற்றும் தடைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு உத்வேகம் அளிக்கவே என்றும் குறிப்பிட்டார். தனது திரையுலக பயணத்தில் பங்களித்த இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இறுதியில் அறிக்கையை தனது பாணியில் “வாழு, வாழ விடு” வாசகத்துடன் முடித்தார். ரசிகர்கள் #33YearsOfAjithKumar என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இதற்கு, “குட் பேட் அக்லி” படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
unknown node