AI மூலம் ‘ராஞ்சனா’ க்ளைமேக்ஸ் மாற்றம் – நடிகர் தனுஷ் கடும் எதிர்ப்பு.!

AI மூலம் மாற்றியமைக்கப்பட்ட க்ளைமேக்ஸ் காட்சியுடன் 'ராஞ்சனா' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதற்கு நடிகர் தனுஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Ranjhanaa - dhanush

சென்னை :நடிகர் தனுஷ், 2013-ல் வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மறு வெளியீட்டிற்காக AI தொழில்நுட்பம் மூலம் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். AI மூலம் மாற்றியமைக்கப்பட கிளைமேக்ஸ் தன்னை ரொம்ப தொந்தரவு செய்துள்ளதாக தனுஷ் எக்ஸ் பக்கத்தில் தனது வேதனையை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது பதிவில், ”புதிய கிளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்ட முடிவு படத்தின் ஆன்மாவையே பறித்துவிட்டதாகவும், AI மூலம் திரைப்படக் காட்சிகளை மாற்றுவது மிகவும் கவலைக்கிடமான வழிமுறையாக இருப்பதாகவும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ஆனந்த் எல். ராயும் இந்த AI மாற்றத்தை ஆதரிக்கவில்லை என்று கூறி, இது அவரது ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்டதாகவும், படத்தின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் ரசிகர்களிடையேயும், திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக AI-யின் பயன்பாடு குறித்து கலைத்தன்மை மற்றும் ஒழுக்கவியல் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

unknown node