சென்னை :நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (வயது 46) உடல்நலக் குறைவால் செப்டம்பர் 18, 2025 அன்று இரவு 8:30 மணியளவில் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பிருந்தாவன் நகர் மின் மயானத்திற்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் தனுஷ், விஜய் ஆண்டனி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
குடும்பத்தினரின் கண்ணீர் மழையில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டு வருகிறது. உடல்நலக் குறைவால் உயிரிழந்த அவரது உடல் வளசரவாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, மாலை 5 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட ரோபோ சங்கர் உடல், பிருந்தாவன் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் கணவர் கார்த்திக் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அவரது மனைவி பிரியங்கா கண்ணீருடன் நடனமாடி விடைகொடுத்தார்.
unknown node