சிறு நகரத்திலிருந்து வந்து தேசத்தின் ஹீரோவாக உயர்ந்த தல தோனி.! உலகநாயகனின் ட்வீட்.!

தல தோனி குறித்து உலகநாயகன் கமல்ஹாசனின் பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தல தோனி குறித்து உலகநாயகன் கமல்ஹாசனின் பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்த பதிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஆம் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். இது குறித்து ரசிகர்கள் உட்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தோனியை குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தல தோனி குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, விளையாட்டு மற்றும் வாழ்க்கையில் சுய நம்பிக்கை எவ்வாறு வெற்றியை அடைய உதவும் என்பதை நிரூபித்த உங்களுக்கு நன்றி. ஒரு சிறிய நகரத்தில் இருந்து வந்து தேசத்தின் ஹீரோவாக உயர்ந்துள்ளீர்கள். உங்களின் கணிப்புகளுடன் கூடிய ரிஸ்குகளையும், அமைதியாக நீங்கள் எடுக்கும் சரியான முடிவுகளையும் இனி முதல் இந்திய அணி மிஸ் செய்யும். இருப்பினும் தற்போதும் நீங்கள் சென்னையுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் பயணத்திற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். தல தோனி குறித்த உலகநாயகனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

unknown node