ஹாலிவுட் நடிகையை வியக்க வைத்த தனுஷ்.! அப்படி என்ன பண்ணார் தெரியுமா..?

அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி

அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

unknown node

சமீபத்தில் தனுஷ் படத்தில் அதிரடி சண்டைக்காட்சி செய்த வீடியோ வெளியிடபட்டிருந்தது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகமாகியது என்றே கூறலாம்.

unknown node

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் ஹாலிவுட் நடிகை ஆனா டி ஆர்மஸ் நடிகர் தனுஷ், தி க்ரே மேன் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.  இது தொடர்பாக பேசிய அவர் “” தி க்ரே மேன் படத்தில் தனுஷும் நானும் சண்டைக் காட்சிகளுக்கான பயிற்சி முகாமில் பல மணிநேரங்களைச் செலவழித்திருக்கிறோம். அவர் மிகவும் பொறுமைசாலி.

unknown node

நல்ல நடிகர் மட்டுமில்லை அவர் கடின உழைப்பாளி. படத்தின் சண்டைக்காட்சியின் பயிற்சிக்காக பல வாரங்கள்  மெனக்கெட்டிருக்கிறார். அப்போதெல்லாம் அவரிடம் இருந்து எந்தவொரு புகாரும் வெளிப்படவில்லை . பொறுமையாக அந்த சண்டை காட்சியை சரியாக முடித்துக் கொடுக்க ஒத்துழைப்பு கொடுத்தார். என வியப்பாக தனுஷ் பற்றி பேசியுள்ளார்.