வலிமை படத்தின் படப்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது தெரியுமா..?

It has been reported that the last phase of the shooting of the movie Valimai starring actor Ajith is going on in Hyderabad.

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .

மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும்,அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழுவினர் தரவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்துடன் வலிமை அப்டேட் கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்திற்கான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிடும் அதற்கு பிறகு வரிசையாக வலிமை படத்தின் அப்டேட்தான்.