இந்த ஆண்டு நெல்சன் தீபாவளி தான்! சின்னத்திரை ஹிட் லிஸ்ட் இதோ...

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை என்றாலே தொலைக்காட்சிகளில் திரைக்கு வந்து 1 மாதங்கள் ஆன புது படங்கள் ஒளிபரப்பாவதும், அதைப்போல பல புது திரைப்படங்களும் வெளியாவது

Nelson Dilipkumar

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை என்றாலே தொலைக்காட்சிகளில் திரைக்கு வந்து 1 மாதங்கள் ஆன புது படங்கள் ஒளிபரப்பாவதும், அதைப்போல பல புது திரைப்படங்களும் வெளியாவது வழக்கமான ஒன்று. மக்கள் அனைவரும் தீபாவளியை கொண்டும் வகையில் தங்களுடைய குடும்பத்துடன் படத்தை பார்த்து மகிழ்வார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், ஆகியோர் நடித்துள்ள ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படம் ஆகிய 3 படங்களும் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதனைப்போல, தீபாவளி வாரம் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் நெல்சன் இயக்கிய படங்கள் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்கள் ஒளிபரப்பாகிறது.

வரும் (வியாழன்கிழமை 9-ஆம் தேதி) மாலை 6.30 மணிக்கு நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன டாக்டர் படம் ஒளிபரப்பாகவுள்ளது. அதன்பிறகு தீபாவளி பண்டிகை அன்று (நவம்பர் 12) -ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஜெயிலர் திரைப்படம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

அதனை தொடர்ந்து வரும் நவம்பர் 13-ஆம் தேதி திங்கள் கிழமை விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற பீஸ்ட் திரைப்படம் மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக நெல்சன் இயக்கிய படங்கள் வெளியாகவுள்ள காரணத்தால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் படங்களை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.