1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைக்கும் "எனிமி" டீசர்.!

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி டீசர் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி டீசர் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் சாம் சி பின்னணி இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. இந்நிலையில், படத்திற்கான டீசர் கடந்த 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வெளியான 1 நாளில் பல சாதனைகள் படைத்தது வருகிறது. இதனையடுத்து தற்போது யூடியூபில் எனிமி டீசர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ட்வீட்டர் பக்கத்தில் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளார்.

unknown node