இரண்டு நாட்களில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்..!

It is reported that an update announcement on the valimai First Look poster will be released on the 12th

12 ஆம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் குறித்த அப்டேட் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் கூறப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாத காரணத்தால் தல ரசிகர்கள் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற 12 ஆம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் குறித்த அப்டேட் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.