மதுரைக்காரனாக இறங்கி அடிக்க களமிறங்கும் அஜித்.! இயக்குனர் அவர் இல்லை.!

நடிகர் அஜித் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார், இந்த

நடிகர் அஜித் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார், இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்படவுள்ளது.

unknown node

இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.

unknown node

அஜித் தனது 61 மற்றும் 62 ஆகிய படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, அஜித் 8 தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் போன்ற படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

ஸ்ரீ கணேஷ் இயக்கும் இப்படத்தில் அஜித் மதுரைக்காரனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.