"பொன்னியின் செல்வன்" படத்தில் நயன்தாராவிற்கு பதில் அனுஷ்கா!அதிர்ச்சியில் ரசிகர்கள்

This news gives informartion about Anushka shocked the audience for Nayantara in the film "Ponniyin Selvan"-Ponniyin Selvan

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.இவர் தற்போது நடிக்கும் படங்களில் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் “தளபதி 63” படத்திலும் ரஜினி நடிக்கும் “தர்பார்” படத்திலும்  படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்களை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” படத்தில்  பூங்குழலி கதாபாத்திரத்தில்  நடிப்பதாக முன்பு தகவல் வெளியானது.

ஆனால் தற்போது நயன்தாராவிற்கு  கால்ஷீட் பிரச்சனையால் “பொன்னியின் செல்வன்” படத்தில் இருந்து விலகி விட்டார் என கூறப்படுகிறது.

மேலும் நயன்தாராவிற்கு  பதிலாக பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவை மணிரத்னம் தேர்ந்தெடுத்து உள்ளார் என தகவல் பரவி வருகிறது.