பிரமாண்ட பிரமாஸ்திரா-2-இல் தடம் பதிக்கும் தீபிகா படுகோனே.! அப்போ ஆலியா பட்.?!

நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலீயா பட் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் "பிரம்மாஸ்திரம்". இந்த படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி என்பவர்

நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலீயா பட் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “பிரம்மாஸ்திரம்”. இந்த படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி என்பவர் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ப்ரீதம் என்பவர் இசையமைக்கிறார்.  ஹிந்தியில் மிகப் பெரும் பொருட்செலவில் “பிரமாஸ்திரா” என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் பிரம்மாஸ்திரம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

unknown node

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜூனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  3 பாகங்களாக உருவாகும் இந்த  படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

unknown node

இந்த நிலையில், சமீபத்தில், ஒரு நேர்காணலில் அயன் முகர்ஜி பிரமாஸ்திரா முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக வெற்றி பெற்றால், பல கதாபாத்திரங்களுடன்  பிரமாஸ்திரா  2 உருவாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.  இதனையடுத்து, தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், பிரம்மாஸ்திரா 2 இரண்டு மையக் கதாபாத்திரங்களான சிவன் மற்றும் பார்வதியைச் வைத்து உருவாக்கப்படவுள்ளதாம்.

unknown node

இந்த இரண்டாவது பாகத்தில் பார்வதி கதாபாத்திரத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். பிரமாஸ்திரா 1-வது பாகத்தின் இறுதியில், நடிகை தீபிகா படுகோனே கேமியோ ரோலில் வருவார். பிறகு இரண்டாவது பாகத்தில் லீட் ரோல் கொடுப்பார்  என தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

இரண்டாவது பாகத்தில் தீபிகா படுகோனே நடித்தால், ஆலியா பட் வரும் காட்சிகள் கண்டிப்பாக குறைக்கப்படும் என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருக்கிறார்கள்.