தலைவி வெளியான 10 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர் ஏ எல் விஜய் அடுத்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள்.
unknown nodeமுன்னாள் முதல்வர் கருணாநிதி வேடத்தில் நாசரும், ஆர்.எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும், எம்.ஆர் ராதாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர். படத்தில் நடித்த இவர்களதை கதாபாத்திரம் ரசிர்கர்களுக்கு மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
unknown nodeஇந்த திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
unknown nodeஇந்த நிலையில், தற்போது வெளியான 10 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 9.11 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.