சென்னை :குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மணிமேகலை விலகிய நிலையில், அவருக்கு அடுத்ததாக யார் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில், விஜய் தொலைக்காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சிக்கு புது தொகுப்பாளர் வருவதாகவும், ப்ரோமோ ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தது.
நிகழ்ச்சியில், மணிமேகலை தொகுப்பாளராகக் கலந்துகொண்டபோது பலரும் அவருக்குக்காக்கவும் நிகழ்ச்சியைப் பார்த்தார்கள் என்றே கூறலாம். அந்த அளவுக்குத் தனது குறும்புத் தனத்தால் மக்களைக் கவர்ந்தார். அவருக்கு அடுத்தபடியாக, அவரை போலக் கலகலப்பான ஆள் இருந்தால் மட்டும் தான் பொருத்தமாக இருக்கும். எனவே, யார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போகிறார் என ஆவலுடன் ரசிகர்கள் காத்துள்ளனர்.
நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்கிற விஷயத்தை இன்னும் வெளியிடாமல் விஜய் தொலைக்காட்சி சர்ப்ரைஸாக வைத்து இருக்கிறது. ஆனால், தற்போது ஒரு ப்ரோமோ ஒன்று வெளியாகி இவர் தான் புது தொகுப்பாளரா? என்கிற அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
unknown nodeஅந்த ப்ரோமோ வீடியோவில் நிகழ்ச்சியின் ஒரு தொகுப்பாளராக இருக்கும் ரக்சன் நிகழ்ச்சியின் புது தொகுப்பாளர் இவர் தான் என VTV கணேஷை காண்பிக்கிறார். உடனே அவரும் ரக்சன் சொல்லித் தருவது போல, VTV கணேஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதைக் காணலாம்.
இந்த ப்ரோமோ திடீரென வெளியாகி வைரலாக பரவி வருவதால் ஒரு வேலை இவர் தான் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறப்போகிறாரா எனவும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நிகழ்ச்சியின் புது தொகுப்பாளர் யார் என விஜய் தொலைக்காட்சி அறிவித்தால் மட்டும் தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
