சென்னையில் பிரமாண்ட செட்.! விரைவில் கோலாகல ஆரம்பம்.! தளபதி66 அடுத்தடுத்த அப்டேட்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம்

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது.

unknown node

இந்நிலையில், பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

unknown node

இந்நிலையில், தற்போது இந்த படம் குறித்து கிடைத்த தகவல் என்னவென்றால், இப்படத்தின் பூஜை இன்று மாலை அல்லது இரவு நடைபெறும் எனவும், படத்திற்கான படப்பிடிப்புக்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதனால் இன்று பூஜை நடந்தால் அதற்கான புகைப்படங்கள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.