வலிமை திரைப்படத்தின் டீசர் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்- எச்.வினோத் – போனிகபூர்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் “வலிமை”. அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக டீசர் மற்றும் இரண்டாம் பாடலுக்காக காத்துள்ளனர்.
இந்நிலையில், ரசிகர்களை உற்சகப்படுத்தும் வகையில், வலிமை பட டீசர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வலிமை திரைப்படதின் டீசர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeமுன்னதாக எந்த அறிவிப்பும் இல்லாமல் வலிமை மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதைபோல் டீசரும் எந்த அறிவிப்பு இல்லாமல் அடுத்த வாரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசரில் முற்றிலும் பைக் ஸ்டன்ட் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். பொருந்திருந்த அடுத்த வாரம் வலிமை டீசர் வெளியாகிறதா என்பதை பார்ப்போம்.
unknown nodeஇந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். புகழ், யோகி பாபு, சுஜித்ரா, கார்த்திகேயா, பானி,அச்சுந்த் குமார், ராஜ் அய்யப்பா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றியுள்ளார்.