நடிகர் விஜயின் மகன் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் நடிக்கவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கடந்த ஆண்டு கூட ஜேசன் சஞ்சய் விஜய்சேதுபதியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் பரவியது.
unknown nodeஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், விஜய்யின் மகன் சஞ்சய், இப்போது தீவிரமாக நடிப்புப் பயிற்சியில் இறங்கியுள்ளாராம்.
unknown nodeஇதற்கு அப்பா விஜய் முழுவதுமாக சம்மதம் தெரிவித்துவிட்டாராம். எனவே முதலில் ஜேசன் சஞ்சய் நடனத்திற்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். அதற்காக வீட்டிற்கே வந்து நடன கலைஞர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.
இதையும் படியுங்களேன்-சூரிக்கு பதில் இந்த நடிகரா.?! வேற லெவல் தகவல் இதோ…. விடுதலை சீக்ரெட்ஸ்…
unknown nodeநடன பயிற்சி முடிந்த பிறகு வசனங்களை உச்சரிக்கும் விதம் பற்றிச் பயிற்சி கொடுக்கப்போகிறார்களாம். மேலும் இன்னும் கிட்டத்தட்ட 4 வருடங்களில் அவரைக் களமிறக்க ஏற்பாடு நடந்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. எனவே விரைவில் விஜயின் மகன் சினிமாவில் களமிறங்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.