இணையும் மாஸ் கூட்டணி.! "தளபதி 67" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். படத்திற்கான

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

unknown node

இந்த நிலையில் விஜய்யின் 67-வது படம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, விஜய்யின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், படத்தை லலித்குமார் தயாரிப்பதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக விஜயின் 67-வது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.

unknown node

மேலும், முன்பே லோகேஷ் கனகராஜ் விஜய் படத்தை இயக்குவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது இந்த கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

இதற்கு முன்பே இதே கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்றது. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.