இயக்குனர் பாலா என்றால் பயம்.?! மீண்டும் சூர்யாவுடன் இணைவாரா கீர்த்தி சுரேஷ்?

சூர்யா நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க 3 மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர் இயக்குனர் பாலா படக்குழுவினர். ஆனால், கால்ஷீட் மேலும் நீடிக்குமா என

சூர்யா நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க 3 மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர் இயக்குனர் பாலா படக்குழுவினர். ஆனால், கால்ஷீட் மேலும் நீடிக்குமா என கீர்த்தி தரப்பு யோசிக்கிறதாம்.

தமிழ் சினிமாவில் மிக திறமையான, தனது கதைக்களத்துக்கு ஏற்ப காட்சிகளை எந்தவித சமரசமும் இன்றி படமாக்கும் இயக்குனர்களில் முதன்மையானவர் இயக்குனர் பாலா. இவரது படத்தில் நடித்தால் நடிப்புக்கென்று எந்தவித பயிற்சியும் தேவைப்படாது எனும் அளவிற்கு நடிகர்களிடம் இருந்து நடிப்புக்கான வேலையை வாங்கிவிடுவார்.

unknown node

ஆனால், சில வருடங்களாக ஒரு ஹிட் படம் கொடுக்க திணறி வருகிறார் என்பதே உண்மை. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான ஹிட் படமென்றால் அது பரதேசி தான். அதற்கடுத்து அவர் இயக்கத்தில் வெளியான தரை தப்பட்டை, வர்மா ஆகிய படங்கள் எதிர்மறை விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.

தற்போது மீண்டும், தனது ஆஸ்தான கதாநாயகர்களுள் ஒருவரான சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க உள்ளார். இந்த புதிய படத்தை சூர்யாவே தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

unknown node

இந்த படத்தில் நடிக்க வைக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 3 மாதம் மட்டுமே தேவைப்படுகிறது. ஒரே கால்ஷீட்டாக கொடுத்தால் பிப்ரவரியில் படம் முடிந்துவிடும் என கூறுகிறார்களாம். ஆனால், கீர்த்தி தரப்போ, பாலா படத்தில் நடிப்பதில் பிரச்சனை இல்லை, ஆனால், 3 மாதம் என கூறி, படம் சரியாக வரவில்லை என்றால் மேலும் கால்ஷீட் தேவைப்படும் என யோசிக்கின்றனரானராம்.

மேலும், இயக்குனர் பாலா, ஷூட்டிங்கில் மிகவும் ஸ்ட்ரிக்ட், தான் நினைத்தபடி காட்சி வர நடிகர்களை போட்டு வாட்டி வதைத்து விடுவார் என பேச்சுகளும் உண்டு. அதனை நினைத்தும் கீர்த்தி பின்வாங்குகிறாரா என தெரியவில்லையே என சினிமாவாசிகள் பேசிவருகின்றனர்.