மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக மாறிவிட்டார். கடைசியாக இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
unknown nodeஇந்நிலையில், விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ள நிலையில், அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
unknown nodeதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, வெற்றிக்கரமாக சினிமாவில் 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதனை கெளரவப்படுத்தும் விதமாக பாரதிராஜாவுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
unknown nodeஅப்போது செய்தியாளர்களை சந்தித்த லோகேஷிடம் உங்களின் அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுங்கள் என்று கேட்க அதற்கு பதில் அளித்த அவர் ” ஒரு 10 நாட்களாக கதை எழுதும் பணியை தொடங்கியுள்ளேன். இன்னும் கொஞ்சம் நாட்களில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
unknown nodeஇதனை பார்த்த விஜய் ரசிகர்கள் சற்று உற்சாகத்தில் உள்ளனர். ஏனென்றால், சமீப காலமாக நம்ப தகுந்த சினிமா வட்டாரங்கள் விஜயின் 67-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்று தகவல் பரப்பி வருகிறார்கள். இதனையடுத்து, லோகேஷ் இப்படி பேசியுள்ளதால் விஜய் ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.