நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அணைத்து ரசிங்கர்களும் எதிர்பார்த்து காத்துள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக முப்பே இருந்து தகவல்கள் பரவி வந்ததது.
unknown nodeசிறுத்தை சிவா கடைசியாக சூப்பர் ஸ்டாரை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சிறுத்தை சிவா அடுத்து ஒரு ஹிட் படத்தை இயக்கி மீண்டும் பழைய பார்முக்கு வர சிறுத்தை சிவா தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
unknown nodeஇதற்காக சூர்யாவிடம் ஒரு பக்காவான கிராமத்து கமர்சியல் கதைக்களத்தில் கதை கூறியுள்ளாராம். அதற்கு சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. மேலும் சிறுத்தை சிவா இயக்கவுள்ள இந்த படத்தில் இரண்டு சூர்யா எனவும், வேதாளம் போல இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
unknown nodeசூர்யா பாலா இயக்கும் படத்தில் நடித்துமுடித்துவிட்டு வாடிவாசல் படத்திலும், சிறுத்தை சிவா இயக்கும் படத்திலும் மாத்தி மாத்தி நடிப்பார் என கூறப்படுகிறது. விரைவில் சிறுத்தை சிவா -சூர்யா இணையும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.