தளபதி-65 படத்தின் மாஸ் அப்டேட்.! குஷியில் ரசிகர்கள்.!

Filming for thalapathy 65 is set to begin on April 19.

தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எப்போது என்பதை குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.