நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசிற்க்கு தயாராகி விட்டது. இந்த படத்தையும் இயக்குனர் சமுத்திரகனிதான் இயக்கியுள்ளார். சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். பரணி கஞ்சா கருப்பு, அதுல்யா ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர், இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தின் ரிலீஸ் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சி இப்படித்தான் இருக்கும் என இயக்குனர் சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது பொது இடத்தில் ஒரு சமூக பிரச்சினையை எதிர்த்து சசிகுமார், பரணி ஆகியோர் சத்தம் போடுபவார்கள். அப்போது சுற்றி உள்ளவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு கடந்து செல்வார்கள். உடனே பரணி, ‘நாம் அவர்களுக்காகத்தான் கத்திட்டு இருக்கோம். ஆனா இவங்க அத கண்டுக்காம அப்படியே போறாங்களே.’ என வருத்தப்படுவார். அதற்கு ,சசிகுமார், ‘கடந்து போறவங்க திரும்பிப் பார்க்கிற வரைக்கும் சத்தமா கத்தணும்.’ என கூறுவார். அப்படி தான் இந்த படத்தின் முதல் காட்சி இருக்கும் என இயக்குனர் சமுத்திரகனி கூறினார்.