விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படத்தில் கண் தெரியாதவராக நடிக்க உள்ளாரா நயன்தாரா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிச்சர்ஸ் மூலம் தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவள் பட இயக்குனர்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிச்சர்ஸ் மூலம் தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார்.

இந்த படம் 2011இல் கொரிய மொழியில் வெளியாகி வெற்றிபெற்ற பிளைன்ட்  எனும் படத்தின் அதிகாரபூர்வரிமேக் என கூறப்படுகிறது. அந்த படத்தில் நாயகிக்கும் கண் தெரியாது. இரு போலீஸ் கேஸிற்கு அந்த பெண் சாட்சியாக இருக்கும். இறுதியில் எப்படி அந்த கேஸ் நிறைவு பெற்றது என்பது போல படம் த்ரில்லராக முடிந்து இருக்கும் என கூறப்படுகிறது. படக்குழு இந்த ரிமேக் விவகாரம் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கவில்லை.