ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தின் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
இப்படத்தில் பிகில் படத்தில் நடித்திருந்த இந்துஜாவும் நடிக்க உள்ளார்.
எல்.கே.ஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கி வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்க உள்ளாராம். இப்படத்தை வேல்ஸ் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
unknown nodeஇப்படத்தில் ஊர்வசி, மவுலி ஆகியோரும் நடிக்க உள்ளனர். இப்படத்தின் சூட்டிங் நாகர்கோவிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்கட்ட ஷூட்டிங் நிறைவு பெற்றது. இப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்திருந்த இந்துஜா நடிக்க உள்ளாராம். பிகில் படத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் இந்துஜா இணைந்து நடிக்க உள்ள படம் இதுவாகும்.