தளபதி 66 படத்தில் சூப்பர் ஸ்டார்.? வைரலாகும் புதிய தகவல்.!

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

unknown node

இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

unknown node

இதனை தொடர்ந்து இரண்டாம் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

இந்த நிலையில், இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. அவர் வேறு யாரும் இல்லை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ் பாபு தான்.

unknown node

ஆம், தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தளபதி 66 படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்தின் இயக்குனர் வம்சி மகேஷ் பாபுவை கெஸ்ட் ரோலில் நடிக்க அணுகியதாகவும், மகேஷ் பாபு உடனே ஓகே கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.