ராக்கி பாய்க்கு எண்டே கிடையாது.! கேஜிஎப் 3 வேலையை ஆரம்பித்த படக்குழு.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான "கேஜிஎப்" திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இரண்டாம்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான “கேஜிஎப்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம்.

unknown node

அதன்படி, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேஜிஎப் 2-கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாக கூறிவருகிறார்கள்.

unknown node

வெளியான ஒரே வாரத்தில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 720 கோடிக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகள் படைத்தது வருகிறது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தாறுமாறாக வசூல் செய்து வருவதால் திரையுலகம் ஆச்சரியத்தில் உள்ளது.

unknown node

மேலும், கேஜிஎப் 2 படம் முடியும் போது கேஜிஎப் 3 வருவதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்தாக அமைந்தது. முதல் பாகம் இரண்டாம் பாகம் வெற்றியை தொடர்ந்து மூன்றாம் பாகத்திற்காகவும் ரசிகர்கள் காத்துள்ளனர்.

unknown node

இந்த நிலையில், படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் கேஜிஎப் 3 படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பிரசாந்த் நீல் தற்போது பிராபாஸை வைத்து சலார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு கேஜிஎப் 3 படத்தை இயக்கும்  வேலையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.