புதிய படத்தில் அறிவியல் விஞ்ஞானியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படம் வரும் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை படம் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ.

இப்படத்தை அடுத்து ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படம் வரும் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை படம் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முன்னரே முடிவடைந்து விட்டது.

இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. ரகுல் பிரீத் சிங் இப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். அறிவியல் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு விஞ்ஞானி என தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிக்கிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.