குறிவைத்த தேதிக்கு முன்னரே படத்தை தயார் செய்யும் முனைப்பில் சிறுத்தை சிவா! தலைவர் 168 மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 168 வது திரைப்படமாக சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் நடித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 168 வது திரைப்படமாக சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. எஜமான் போன்று கிராமத்து பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காமெடி வேடத்தில் சூரி, சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் வேக வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தீபாவளிக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டதாம். ஆனால் தற்போது படம் வேக வேகமாக ஷூட்டிங்  நடைபெற்று வருவதால், அப்படத்தை ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு களமிறக்க அதிக வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சிறுத்தை சிவா படத்தை கொடுத்து விடும் வேகத்தில் உள்ளாராம். படம் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.