திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு? STR48 படத்தின் அப்டேட்!

நடிகர் சிம்புவும் எந்த காதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதற்கு தன்னுடைய பாணியில் ரசிகர்களுக்கு பிடித்தது போல நடிப்பதில் வல்லவர் என்றே கூறலாம். இவர் தற்போது

silambarasan STR 48

நடிகர் சிம்புவும் எந்த காதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதற்கு தன்னுடைய பாணியில் ரசிகர்களுக்கு பிடித்தது போல நடிப்பதில் வல்லவர் என்றே கூறலாம். இவர் தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக STR48 படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

சமீபத்தில் நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. போஸ்டரில் இரண்டு சிம்பு இருந்தார் எனவே, படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பார் என கூறப்பட்டது. படத்தில் ஹீரோவாகவும் அவரே நடிப்பதாகவும் வில்லன் கதாபாத்திரத்திலும் அவரே நடிப்பதாகவும் கூறப்பட்டது.

அந்த விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டும் சாய் பல்லவி?

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சிம்பு வில்லனாக நடிக்கும் அந்த கதாபாத்திரம் திருநங்கை கதாபாத்திரமாம். சிம்பு படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறாராம். தன்னுடைய கதாபாத்திரமும் படமும் பெரிய அளவில் பேசப்படவேண்டும் என்பதற்காக சிம்பு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்து வருகிறாராம்.

திருநங்கை கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருவதால் இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் சிம்பு திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் இந்த திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.