சந்திரமுகி 2-வில் இணையும் இரண்டு ஹீரோயின்கள்.! யார்..யார்..தெரியுமா..?

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் பி.வாசு தான் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு,

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டுவெளியான திகில் திரைப்படம் “சந்திரமுகி “. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்தது.

unknown node

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் பி.வாசு தான் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

unknown node

படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க, படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

unknown node

இந்த நிலையில், இந்த படத்தில் ராகவலரன்ஸ்க்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்கவுள்ளார்களாம். அவர்கள் யார் யார் என்றால், லட்சுமி மேனன் மற்றும் மகிமா நம்பியார் இருவரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.