விஜயுடன் மீண்டும் நடிக்க உள்ளாரா கீர்த்தி சுரேஷ்?! தளபதி 63 அப்டேட்ஸ்!!!

தளபதி விஜய் தற்போது தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லியின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க

தளபதி விஜய் தற்போது தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லியின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது.

இதில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் கதிர், விவேக், யோகிபாபு, ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் 16 புதிய பெண்கள் விளையாட்டு வீராங்கனைகளாக நடிக்க உள்ளனர். இதில் நடிகர் ரோபோ சங்கரின் மகளும் ஒருவராவர்.

இப்படத்தில் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடித்த ஆத்மிகா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதியான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

DINASUVADU