நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக டான் திரைப்படம் மே மாதம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் அவர்கள் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது.
unknown nodeஇந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ். இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்து ரிலிஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
unknown nodeஇந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பூஜையில் நடிகர் பிரேம் ஜி கலந்துகொண்டிருந்தார் . தற்போது வெளியான தகவலின் படி, இந்த படத்தில் பிரேம் ஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சினிமாகாரர்களுக்கு பேரதிர்ச்சிதான். அவரை எப்படி வில்லனாக காண்பிக்க போகிறார் இயக்குனர் என்கிற கேள்வி அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது.