நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி வரும் 14-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
unknown nodeமுழுக்க முழுக்க ஆக்சன் கதையா வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்கபோகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் கமலின் அடுத்த படத்தை கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeகமல்ஹாசன் – முத்தையா கூட்டணி இணைந்தால் விருமாண்டி திரைப்படம் போல ஒரு திரைப்படம் உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை.. முத்தையா தற்போது நடிகர் கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு கமல்ஹாசனின் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.