பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட நயன்தாரா.! ரசிகர்களை பதற வைத்த அந்த வீடியோ இதோ..

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது அடுத்தாக வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜி.கே.விஷ்ணு

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது அடுத்தாக வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜி.கே.விஷ்ணு என்பவர் இயக்கத்தில் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு “02” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இதனையடுத்து படத்திற்கான டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டீசரில்  “ஒரு பேருந்து மண்ணிற்குள் புதைக்கிறது. இதனால் பேருந்தில் உள்ள  பயணிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படும், சுவாச பிரச்சனைக்காக எப்போது தன் மகளுடன் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் உள்ள சக பயணிகள் குறிவைத்து எடுக்க முயற்சி செய்கிறார்கள். அதனை  அந்த குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கும் நயன்தாரா எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை என்று டீசரில் கட்டப்பட்டுள்ளது. பதபதைக்க வைக்கும் இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node