“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!
வேட்டையன் படத்தில் நடித்ததில் இருந்து ரஜினிகாந்தின் ரசிகையாக மாறிவிட்டதாக அபிராமி வேட்டையன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு அந்த படத்தில் தன்னுடைய நடிப்பினால் அனைவரையும் கவர்ந்திருப்பார். கமல்ஹாசனுடைய தீவிர ரசிகை என பல இடங்களில் அபிராமி கூறியிருக்கிறார்.
அப்படி கமல்ஹாசனுடைய தீவிர ரசிகையாக இருந்த இவர் இப்போது ரஜினியுடைய ரசிகையாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணமே, அவர் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த போது அவருடன் பழகக்கூடிய வாய்ப்பு அபிராமிக்கு கிடைத்துள்ளது.
எனவே, வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போது அவருடன் நடித்ததை விட அவருடன் அமர்ந்து சில விஷயங்களை பற்றி பேசியது தன்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு என நெகிழ்ச்சியாக வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
விழாவில் பேசிய அவர் ” வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்துடன் நடந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்கள் பற்றி கேள்வி கேட்டு தொந்தரவு செய்தேன். அவருடைய மூளை எப்படி யோசிக்கிறது என்பதை பற்றி அவருடைய அருகில் இருந்துகொண்டு பார்க்க நினைத்தேன்.
அந்த பாக்கியமும் எனக்கு கிடைத்தது. நான் கமல்ஹாசனுடைய தீவிர ரசிகை என்பது அனைவர்க்கும் தெரியும். ஆனால், வேட்டையன் படத்தில் நடித்ததில் இருந்து ரஜினிகாந்துடய தீவிர ரசிகையாக மாறிவிட்டேன்” என வெளிப்படையாகவே தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வேட்டையன் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து போல இருக்கும் எனவும் திரையரங்குகளுக்கு வந்து பாருங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.